2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இனவாத கட்சிகளை சமாளிக்காமல் கூட்டமைப்புடன் பேச்சா? அரியம் எம்.பி

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
'அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாத கட்சிகளை சமாளிக்காமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதன் மூலம் இனவாத கருத்துக்கள் கொண்டோரை இந்த அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது' என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அரியநேத்திரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

'அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் தீர்மானித்துள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதுவும்  எமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்ததை வரவேற்கிறோம். ஆனால் இதே அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அமைச்சர் சம்பிக ரணவக்க பிரதிநிதித்துவப்படுத்தும் இனவாத போக்குடைய ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளை இவர்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறார்கள்.?

இவர்களுடன் முதலில்பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை ஒருவழிக்கு கொண்டுவரவேண்டும். அரசாங்கத்துடன் 2011 ஆம் ஆண்டு 19 கட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தோம். அதில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்தது? பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வருவதை நாங்கள் ஒருபோதும் நிராகரிக்கவில்லை.

2011 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை முடிவுகளை அறிவிக்கவேண்டும். ஆகக் குறைந்தது பெண் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்து அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .