2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அவதானத்துடன் தொழிலுக்குச் செல்ல மீனவர்களுக்கு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு தினங்களாக கடும் மழை பெய்துவருகின்ற நிலையில், கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பு அங்கியை எடுத்துச்செல்லுமாறும் காலநிலை சீர்கேட்டை அவதானித்துக்கொண்டு கடலுக்குச் செல்லுமாறும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் ஜோர்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது காலநிலை சீர்கேடு நிலவுவதால் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் கடலுக்குச் செல்லவேண்டும். கடலுக்குச் செல்லுவோர் பாதுகாப்பு அங்கிகளையும் எடுத்துச்செல்ல வேண்டும்.  அத்துடன், காற்று பலமாக வீசினால்; கடலுக்கு செல்லுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வாகரை பிரதேசத்தின் கதிரவெளி, பாலமுனைப் பகுதிகளிலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்றவர்களின் வள்ளம் பாரிய அலையினால் கவிழ்ந்ததாகவும் இதன்போது அவ்வள்ளத்திலிருந்த மூவர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் ஏனைய மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவற்றினை கருத்திற்கொண்டு கடலுக்குச் செல்லும் மீனவர்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .