2026 மே 04, திங்கட்கிழமை

நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுச்சபை கூட்டம்

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளையின் நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுச்சபை கூட்டம் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் ரி.வசந்தராசா, மற்றும் அதன் செயலாளர் மதிசுதன், காத்தான்குடி பிரிவின் முன்னாள் தலைவர் எம்.றாபி உட்பட அதன் நிர்வாக உறுப்பினர்கள், பொதுச் சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளைக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்வும் செயலாளராக ஏ.எம்.எம்.சுல்மியும் பொருளாலராக ஏ.எல்.நசீர் அகமட் உட்பட நிர்வாக குழு உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வைபவத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளையில் இருந்து சிறப்பாக சேவையாற்றிய முன்னாள் தலைவர் எம்.றாபி, மற்றும் அதன் முன்னாள் செயலாளர் எம்.இர்பான், உட்பட எம்.மிப்சி, மௌலவி இர்ஸாத், ஏ.எல்.நசீர் அகமட் ஆகியோர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் ரி.வசந்தராசாவினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .