2026 மே 04, திங்கட்கிழமை

கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏழு வயதான சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து மரணித்த சம்பவம் வெருகல் பொலிஸ் பிரிவிலுள்ள வட்டவான் கிராமத்தில் நடந்துள்ளது.

வெருகல் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வட்டவான் தான்தோன்றீஸ்வரர் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் பவானந்தன் விதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராகும்.

அயல் வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர்த் தாகம் எடுக்கவே வீட்டிலிருந்த கிணற்றில் நீரை அள்ளிப்பருக இந்தச் சிறுவன் முயற்சி செய்துள்ளான்.

கிணற்று வாளியில் கட்டப்பட்டிருந்த கயிறு நீளம் குறைந்ததாக இருந்த படியால் சிறுவன் தானாக உந்தித் தள்ளி கிணற்றில் குனிந்து நீரை அள்ள முயற்சித்துள்ளார். அப்பொழுது கால்கள் பிடியிழந்து 7 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்து காணப்பட்ட கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

அயலவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டெடுத்து அலிஒலுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுவனின் உயிர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுவனின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கிராம சேவையாளரான பி. பாலேந்திரா தெரிவித்தார்.

இதேவேளை? வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த குறித்த சிறுவனின் தாய் மரணச் செய்தி நாடு திரும்பியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .