2026 மே 04, திங்கட்கிழமை

வீடு வசதியற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நிதியுதவி

Super User   / 2013 மார்ச் 26 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர் கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையான வீடு வசதியற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் 700 வறிய குடும்பங்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்துவதற்கான காசோலை நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேர்பா மண்டபத்தில் இந்த காசோலை வழங்கும் வைபவம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தலா ஒரு பயனாளிக்கு வழங்கப்படவுள்ள ஒரு இலட்சம் ரூபா பணத்தில் முதற் கட்டமாக இருபதாயிரம் ரூபாவுக்கு காசோலை வழங்கப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக பிரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கென வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் 100 நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கென 3 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0

  • vallarasu Tuesday, 26 March 2013 03:57 PM

    நித்திரை அமைச்சர் இவைகளைத்தன் பார்த்துக்கொள்கிரார், தற்போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி. ம்ஹு.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .