2026 மே 07, வியாழக்கிழமை

கல்விக் குழுக்களுக்கு இடையில் சந்திப்பு

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்விக்குழுவுக்கும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்விக் குழுவுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை காத்தான்குடி சம்மேளனத்தில் இடம்பெற்றது.

சம்மேளன கல்விக்குழுவின் தலைவர் சட்டத்தரணி  ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற  இச்சந்திப்பில்; காத்தான்குடி, ஏறாவூர் கல்விக் குழுக்களின்  பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது, மட்டக்களப்பு மத்தி வலயம் தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட கல்வி அடைவு மட்டத்தினை தொடர்ச்சியாக  பெற்றுக்கொள்வதற்கு  காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா ஆகிய மூன்று முக்கிய பிரதேசங்களின் சம்மேளனங்கள் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இதன்மூலம் இப்பகுதி மாணவர்களின் கல்வி நிலையினை  அதிகரிப்பதற்கும், ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் சுமுகமான உறவுகளை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை இப்பகுதி அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்போடு முன்கொண செல்வது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .