2025 மே 05, திங்கட்கிழமை

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட புகையிலை உற்பத்தி போதைப்பொருட்களை காத்தான்குடி பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் உற்பத்திசெய்யப்பட்ட நிலையில் சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் 20 வண்டல்களைக்கொண்ட 200 பெட்டிகளே மதுவரித்திணைக்களத்தினர் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இந்த போதைப்பொருட்கள் விற்பனைசெய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து இந்த போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட அத்தியட்சர் என்.துசாதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா,மதுவரி திணைக்கள பரிசோதகர் டயஸ்,சாஜன் மேஜர் எம்.செல்வக்குமார்,மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.செல்வராசா,எஸ்.ஜெயக்குமார்,கே.ரஜனிக்காந்த ஆகியோர் கொண்ட குழுவினரே இவற்றைக்கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை நீதிமன்றில் சமர்ப்பிதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறான சட்ட விரோத போதைப்பொருட்களை விற்பனைசெய்வோர் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X