2025 மே 05, திங்கட்கிழமை

'இந்திய வீட்டு திட்டத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி'

Super User   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இந்திய வீட்டு திட்டத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில்; மீள்குடியேறியுள்ள மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் எட்டு வீடுகள் மாத்திரமே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, றூகம் கிராமத்தின் ஆயுர்வேத வைத்திய மத்திய மருந்தகம் நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் நேரடியாக பேசி இருப்பதோடு இந்திய உயர் ஸ்தானிகருடனும் முறையிட்டுள்ளேன். வட மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய சுதந்திர மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களும் வட மாகாண சபையின் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவர்.வட மாகாணத்தில் மீள்குடியேற்றப்படவுள்ள முஸ்லிம்களின் விடயத்தில் அழுத்தங்களை கொடுத்து அவர்களின் நலன்கள் சார்ந்து செயற்படவள்ளனர்.

வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லவும் எமது கட்சியின் தலைமை தயாராகவுள்ளது" என்றார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர் எஸ்.அமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X