2025 மே 05, திங்கட்கிழமை

காங்கேயனோடையில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் மற்றும் ஹிஸ்புல்லா வித்தியாலயத்தில் நிர்மாணிக்க்பபட்டுள்ள சிறுவர் பூங்கா என்பன இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் சவூதி அரேபியாவின் மத விவகார கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் கரீம் இப்றாகீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X