2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாவனைக்குதவாத மென்பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

மனித பாவனைக்குதவாதது என கருதப்படும் 236 மென்பான போத்தல்கள்களை மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

ஆரையம்பதி சுகாராதர பிரிவிலுள்ள பாலமுனை மற்றும்  4 ஆம் கட்டை ஆகிய இடங்களிலுள்ள 7 வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போதே இவைகள் கைப்பற்றப்பட்டதாக ஆரையம்பதி பொதுச்சுகாதார பரிசோதகர் கே.நரேந்திரகுமார் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குளிர்பானம் அருந்தியபோதே அந்த போத்தலினுள் இருந்து துகள்களும் சிறிய கழிவுகளும் பானம் அருந்தும் ஸ்ரோவினூடாக வெளிவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரின் முறைப்பாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட  மென்பானங்கள் மாதிரிகள் கொழும்பு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்டவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .