2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான மத்தியஸ்த  சபை உறுப்பினர்கள் முதன் முதலாக நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (06) பிற்பகல் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

வை.அஹமட் வித்தியாலயத்தின் அதிபரும் மத்தியஸ்த சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்தன, ஓட்டமாவடி மத்தியஸ்த சபை தவிசாளர் ஏ.எம்.ஏ.காதர், வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எச்.எம்.எம்.மீராமுகைதீன், மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டின் 326ஆவது மத்தியஸ்த சபையாகவும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் முதலாவது மத்தியஸ்த சபையாகவும் நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் அணைக்குழுவினால் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 13பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்களது பதவிக் காலம் 03 வருடங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X