2025 மே 03, சனிக்கிழமை

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களுக்கு கடந்த 02 மாதங்களாக வழங்கப்படாதுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி மேற்படி வளாகத்திற்குள் செவ்வாய்க்கிழமை (11) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கடந்த 22 நாட்களாக  ஆலை உற்பத்திகளிலும் ஈடுபடமாலும் இவர்கள் உள்ளனர்.

இந்த ஆலையில் கடமையாற்றுகின்ற 158 நிரந்தர ஊழியர்களுக்கும் 100 அமைய ஊழியர்களுக்கும் கடந்த டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லையென காகித ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கவனயீர்ப்பு போராட்ட இடத்திற்கு வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேற்படி ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.  இதன்போது, கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் அவரிடம் காகித ஆலை ஊழியர்கள் கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொன். செல்வராசா தலைமையில் காகித ஆலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது, ஆலை உற்பத்திகளை  மேற்கொள்ளும் நிலையில், ஒருவாரத்திற்குள்  டிசெம்பர் மாதச் சம்பளமும் தொடர்ந்து 10 நாட்;களின் பின்னர் ஜனவரி மாதச் சம்பளமும் வழங்கப்படுமென்று ஆலை நிர்வாகத்தினர்  தெரிவித்தமைக்கு ஊழியர்கள் இணங்கவில்லை.

இவர்கள் இவ்வாறு கூறுவது இன்று மட்டும் புதிய விடயமல்ல. தொடர்ந்து இதே முறையில் தான் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. எங்களது சம்பளம் கிடைத்தால் மட்டுமே ஆலை இயங்குவதற்கு பங்களிப்புச் செய்யப்படுமெனவும் ஆலை ஊழியர்கள் கூறிச் சென்றனர்.

 'காகித ஆலை நிர்வாகமே 75 இற்கும் மேற்பட்ட இரும்பு லொறிகள் விற்ற பணம் எங்கே', 'இரண்டு மாதச் சம்பளத்தை தராமல் ஏமாற்றும் முகாமைத்துவமே வெளியேறு', 'ஏழை ஊழியர்களின் இரத்தம் உறுஞ்சும் தலைமை அதிகாரியே உன்னை வெளியேற்றுவோம்', 'தொழிலாளர்களுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகாமைத்துவமே இது உனக்குத் தேவையா',  உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X