2025 மே 03, சனிக்கிழமை

கிராம அபிவிருத்தி கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வியாழக்கிழமை (13) பிற்பகல் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கிராம வீதிகள் புனரமைப்பு செய்தல், தபாலகத்தினைப் புனரமைத்தல், பொது விளையாட்டு மைதானத்தினைப் புனரமைத்தல், பொதுச்சந்தை தொகுதியினை அபிவிருத்தி செய்தல், பாடசாலைகளை புனரமைத்தல் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினை நகரசபையாக தரமுயர்துதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மக்களின் இக்கோரிக்கைகளினை படிப்படியாக நிவர்த்தி செய்து தருவதாக இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மீள்;குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் உறுதியளித்தார்.

கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு   மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சகுணன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர் மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X