2025 மே 08, வியாழக்கிழமை

மீராகேணியில் முன்மாதிரி முன்பள்ளி திறப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர், மீராகேணி கிராமத்தில் 36 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முன்மாதிரி முன்பள்ளி ஒன்று செவ்வாய்க்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு மற்றும் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் வேண்டுகோளின் பேரில் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனம் இந்த முன்மாதிரி முன்பள்ளியை நிர்மாணித்து மக்களிடம் கையளித்துள்ளது. பிளான் ஜேர்மனி நிறுவனம் இதற்கு நிதியுதவியளித்திருந்தது.

இந்த நிகழ்வில் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சித் திட்டப் பிரதிநிதி ஒபேன் ஒலிவா, கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம், முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவன மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த முன்மாதிரி முன்பள்ளி நிர்மாணத்திற்கான இணை அனுசரணையை முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா, மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் என்பன வழங்கியிருந்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X