2025 மே 12, திங்கட்கிழமை

செங்கலடிப் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுவதற்கான நடவடிக்கை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப் படவுள்ளதாக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர்பற்று அமைப்பாளர் ஷாகீஷன் ஆத்மராஜன் வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

 கடந்த காலங்களில் யுத்த்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மிகவும் குறைந்த அளவிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ள ஏறாவூர்ப் பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்

 கரடியனாறை மையமாக வைத்து புதிய பிரதேச செயலகம் அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்கப் பட்டுவருவதாகவும் மற்றும் உறுகாமம் கித்துல் குளங்களை இணைத்து புதிய நீர்ப்பாசனத்திட்டங்களை ஏற்படுத்தி 15ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மட்டு நகரின் முக்கிய பகுதியான இப்பிரதேசத்தின் கால்நடை அபிவிருத்தி புதிய தொழிற்சாலை அமைத்தல் ஏ-5 வீதியை தரமுயர்த்தல் போன்ற அபிவருத்திப் பணிகளை முன்னெடுக்க மட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து அவர்களிடம் தான்கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தனது கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக ஷாகீஷன் ஆத்மராஜன்  மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X