2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி நலன்புரிச்சங்க பொதுக் கூட்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கர்கள் நலன்புரிச்சங்கம் செயற்பட்டு வருவதாக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளருமான பி.குணரட்னம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கர்கள் நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் சனிக்கிழமை (26) தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் சங்க அங்கத்தவர்களுக்கு பல் வேறு உதவிகளை வழங்க முடிந்தது.

திவிநெகும திட்டம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றுக்கு கொழும்பு சென்று திரும்பிய எமது சகோதர உத்தியோகத்தர்கள் மன்னம்பிட்டி பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகி ஒரு சமுர்த்தி முகாமையாளரும், இரண்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் உயிரழந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்புதான் இச் சங்கத்தின் தேவை அவசியமென்பது எல்லோராலும் உணரப்பட்டது. அதன் பின்பு தான் இந்த நலன்புரிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

 இச் சங்கத்தினால் சங்க அங்கத்தவர்கள் மூன்று பேரின் உறவினர்கள் மரணமானதையிட்டு அவர்களது வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி ஒவ்வொருவருக்கும் தலா 15000 ரூபா வழங்கப்பட்டு;ள்ளது.

 அதே போன்று இரண்டு உறுப்பினர்களது பிள்ளைகளின் திருமணத்திற்காக தலா 15000 ரூபா வழங்கப்பட்டு;ள்ளது மற்றும் அங்கத்தவர்களது பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு வைபவங்களுக்காக தலா 15000 ரூபா வழங்கப்பட்டு;ளளதுடன் இரண்டு அங்கத்தவர்களின் பிள்ளைகளின் கத்ணா வைபவங்களுக்காகவும் தலா 15000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

 குறிப்பிட்ட மாதங்களாக இச் சங்கம் தன்னாலான சேவைகளைத் திறன்படச் செய்தமைக்கு அங்கத்தவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 இதன் போது 2013ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சங்க உறுப்பினர்கள் 17 பேரின் பிள்ளைகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 இந்த பொதுக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஏ.அலி உட்பட பொருளாளர் அதன் நிருவாக உறுப்பினர்கள், பொதுச் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X