2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வைத்திய அத்தியட்சகர் தாய்லாந்துக்கு பயணம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தாய்லாந்து நாட்டில் நடைபெறும் தோல் நோய் மற்றும் தோல் அறுவை சிகிச்சை தொடர்பான பயிற்சி செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை (1) தாய்லாந்துக்கு செல்கின்றார்.

இதனால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் டி.கௌரி சங்கரன் கடமையாற்றுவார் என டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

தாய்லாந்து, பேங்கொக் நகரில் தோல் நோய் மற்றும் தோல் அறுவை சிகிச்சை தொடர்பான பயிற்சி செயலமர்வு 2 ஆம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்திற்கு நடைபெவுள்ளது.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் இந்த செயலமர்வில் கலந்துகொள்கின்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X