2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் வட்டியில்லா கடன்திட்டம்

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் முதல் தடவையாக வட்டியில்லாத கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் ஆலோசனையின் பேரிலும் அவரது வழிகாட்டலிலும் இந்த வட்டியில்லாத கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறுமைக் கோட்டின் கீழுள்ள வாழ்வின் எழுச்சிட்ட பயணாளிகளின் தொழில் முயற்சிக்காக இந்த வட்டியில்லா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டியில்லா கடன் வழங்கும் வைபவம் புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பாத்துமா பரீட், முகாமைத்துவப்பணிப்பாளர் இ.குணரட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 72 பயணாளிகளுக்கு இந்த வட்டிpல்லா கடன் வழங்கி வைக்கப்பட்டது.

பயணாளிகளின் தொழில் முயற்சிகளுக்கேற்ப ஆகக்கூடிய தொகையாக ஐம்பதாயிரம் ரூபாவும், குறைந்த தொகையாக பத்தாயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X