2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் நாளை நடமாடும் சேவை

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நிறைவான இல்லம் வளமான தாயகம் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஏறாவூரில் நாளை சனிக்கிழமை (10) நடாமடும் சேவையொன்று இடம்பெறவிருப்பதாக பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

மக்களை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இது நடத்தப்படவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடைபெறவிருக்கின்றது.

ஏறாவூர் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் காலை எட்டரை மணிதொடக்கம் மாலை நான்கு மணிவரை இந்த இடம்பெயர் சேவை நடைபெறவிருக்கின்றது.

பொதுமக்கள் பிரதேச செயலகம், பொலிஸ், தபால் அலுவகம், சுகதார வைத்திய அதிகாரி அலுவலகம், காணி, விவசாயத் திணைக்கம், ஆயர்வேத வைத்தியத் தேவைகள், நகரசபை உள்ளிட்ட தங்களது அத்தனை அலுவல்களையும் இந்த இடம்பெயர் சேவையில் முடித்துக் கொள்ளலாம் என்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X