2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உபகரணங்கள் கையளிப்பு

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் அக்ரெட் சர்வதேச அரச சார்பற்ற அமைப்பினால் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கான சமூக உந்துதல், மற்றும் வறியோர் ஆதரவு பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின்     கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யபட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு தொழில் செய்வதற்காக வழங்கப்பட்ட உபகரணங்களை உத்தியோக பூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வும், அப்பயனாளிகழுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளுக்கான சான்றிதழ் வழ்ங்கும் நிகழ்வும்; மட்டக்களப்பு கோப்பின் விடுதி மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (06)நடைபெற்றது.
 
அக்ரட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தாயுல் பலாஹ், மற்றும் திட்ட உத்தியோகத்;தர் இ.கஜேந்திரன், ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ம.சுதர்சனன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
மேலும் இந்நிகழ்வில் அக்ரெட் நிறுவனத்தின் இலங்கைக்;கான வதிவிடப் பிரதிநிதி அன்ரு சட்டிங், செபேநெற் ஸ்ரீலங்கா அமைப்பின் செயலாளர் என்.பி.தந்திரிக்கே, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள், வங்கிகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள,; மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், அக்ரெட் நிறுவனத்தின்  உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு வழங்கப்பட்ட முகாமைத்துவம், வியாபாரத் திட்டமிடல், கணக்கு வைப்பு முறைமை, போன்ற பல பயிற்சி நெறிகளுக்குரிய சான்றிதழ்களும், ஒரு தொழில் முயற்சியாண்மையாளருக்கு  தலா 15 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வீதம் 11 பேருக்கும் தொழில் முயற்சி உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.
 
இவற்றுள், நெல்குற்றும் இயந்திரம், அரிசி மற்றும் ஏனைய தானியங்கள் அரைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம், கோழித் தீன் தயாரிக்கும் இயந்திரம், தயிர் தயாரிக்கும் இயந்திரம், மட்பாண்டம் தயாரிக்கும் இயந்திரங்கள் என்பன தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X