2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செயலக விளையாட்டு விழா

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மண்முனை மேற்குப் பிரதேச செயலக  விளையாட்டு விழாவில் விளாவெட்டுவான் ராஜா விளையாட்டுக் கழகம் 76 புள்ளிகளைப் பெற்று சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் கன்னன்குடா உதயதாரகை விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் மண்முனை மேற்குப் பிரதேச செயலகம்  என்பன இணைந்து ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இவ்விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று(09) கலாசார விளையாட்டு விழாவுடன் நிறைவு பெற்றது.

மண்முனை மேற்குப் பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் வி.பூபாலராசாவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நேற்று காஞ்சிரங்குடா பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி இடம் பெற்றதுடன் மெய்வல்லுனர் திறனாய்வு இறுதிப்போட்டிகளும், உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்துகொண்டார். மண்முனை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நீர்மல்ராஜ்,மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் ரி.ஈஸ்பரன்,ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் திட்ட இணைப்பாளர் ஏ.தர்சன்,பிரதேச செயலக கணக்காளர் கே.ஜெகதீசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X