2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடிச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த ஜலால் லாபீர் அறபாதத் (17) என்பவர் உயிரிழந்ததாகவும் இவருடன் பயணித்த முஹம்மட் யாஸீர் (வயது 16) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தன.

மேற்படி நபர்கள் ரெதிதென்ன கிராமத்திலிருந்து ஏறாவூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது நாவலடிப் பகுதியில் வைத்து வீதிக்குக் குறுக்கே வந்த  மாட்டுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சடலம் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதாகவும் விபத்துக் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X