2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடமாடும் சேவை

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' என்ற தொனிப் பொருளிலான கிராமம் கிராமமாக வீடு வீடாக எனும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட நடமாடும் சேவை ; இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

ஏறாவூர் மட்/அல் அஸ்ஹார் வித்தியாலயத்தில்  ஏறாவூர் நகர் பிரதேசசெயலாளர் முஹமட் ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவுத் கலந்து கொண்டதுடன் ஏறாவூர் நகரபிதா அலிசாஹீர் மௌலானா, கிழக்குமாகாண பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்,திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


இதன் போது சமுர்த்தி வங்கிச்சங்கத்தால் மூலம் வழங்கப்படும் சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுகப்பாதுகாப்புக் கொடுப்பனவுகள், மற்றும் சிசுதிரிய  கொடுப்பனவுகள் மற்றும்  கிழக்குமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தால் சிறுவர்களுக்கான மருத்துவக் கொடுப்பனவுகள்,கிழக்குமாகாண சமூக சேவை திணைக்களத்தால் விசேட தேவையுடையோருக்கான முச்சக்கர வண்டிகள் என்பன வழங்கப்பட்டதுடன்.

இதன் போது பிறப்பு,சேவை, அடையாள அட்டை  .சமூக சேவைகள், சமூர்த்தி. திவிநெகும, வியாபாரம். தொழில். பொதுவசதிகள். கல்வி, சிறுவர்மகளீர் விவகாரம். சுகாதாரம். காணி .பொலிஸ் திணைக்களம் என 8 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகள் அவர்களது கிராம சேவகர் பிரிவுகளிலேயே  வழங்கப்பட்டன இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல  நன்மைகளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X