2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தூதுவர்குழு இந்திய வீடமைப்புத்திட்டத்தை பார்வையிட்டது

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் ஆகியோர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீடமைப்புத்திட்டம் மற்றும் கரடியனாறு பண்ணை என்பவற்றைப் பார்வையிட்டனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சனிக்கிழமை (10) காலை விஜயம் செய்தனர்.

இந்தக் குழுவில், சவூதி அரேபியாவுக்கான தூதுவர் முகமட் குசைன் முகமட், ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் மரிக்கார் பாவா, பிலிப்பைன்ஸ்சுக்கான தூதுவர் பேராசிரியர் எஸ்.வி.டி.காமினி சேனாநாயக்க, சிசெல் நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் டி.ராஜித பியதிஸ்ஸ, சிட்னி, கெய்ரோ, டுபாய், ஓமான் ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திரிகளான செல்வி. ஜாசர அபேநாயக்க, பி.கே.எம்.ஆர்.எஸ்.விஜேயரத்ன, டிலுக்சன் ஜெயசிங்க, பிரதீப் பி.மத்துமபண்ரார ஆகியோர் அடங்குகின்றனர்.

அத்துடன், இராஜதந்திரிகள் கற்கைகள் கல்லூரி பணிப்பாளர் எம்.ஆர்.கீகெல், திட்ட அதிகாரி செல்வி டேசானி மேகலா, உதவித்திட்டப் பணிப்பாளர் துமிந்த சுஜீவ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில்; மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் ஏறாவூர் பற்றின் உறுகாமம் பிரதேசத்தில் நடைபெறும் இந்திய வீடமைப்பு வேலைத்திட்டம், மற்றும் கரடியனாறு விவசாயப்பண்ணை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டதுடன், மக்களுடனும் கலந்துரையாடினர்.

களப்பயணத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், எஸ்.முரளிதரன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X