2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாணவர் சந்தையும் பரிசளிப்பு நிகழ்வும்

Kanagaraj   / 2014 மே 11 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு செலான் வங்கி கிளையின் ஏற்பாட்டில் இன்று(11) ஞாயிற்றுக்கிழமை மட். ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையில் கலாச்சார விளையாட்டுப் போட்டி நிகழ்வும் செலான் மாணவர் சந்தை நிகழ்வும் பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டார். அத்துடன் செலான் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் பிரியந்தன், செலான் வங்கியின் மட்டக்களப்புக் கிளை முகாமையாளர் திருமதி பத்மஸ்ரீ இளங்கோ உட்பட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் செலான் வங்கி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் பாடசாலை சிறுவர்களினால் செலான் சிறுவர் சந்தையும் நிகழ்த்தப்பட்டது.

இதன் போது அதிதிகளால் மாணவர்களின் சந்தைப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. கடந்த வலயமட்டத்தில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட இப்பாடசாலையை சேர்ந்த பரராஜசிங்கம் ரெஜிதா மற்றும் 19 வயதுக்குட்பட்ட தனிநபர் கராத்தே போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட இன்பராசா கிஷானி ஆகிய மாணவிகள் பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X