2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உபவேந்தரின் செயற்பாடுகளே குழப்பத்துக்கு காரணம்

Kanagaraj   / 2014 மே 12 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது நிலவும் குழப்பகரமான சூழ்நிலைக்கு  பல்கலைக்கழக உபவேந்தரின் தான்தோன்றிதனமான செயற்பாடுகளே  காரணம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்  கழகத்தின்  வருடாந்த விளையாட்டு விழா அதன் தலைவர் இரா.கதிரவேற்பிள்ளை தலைமையில் ஞாயிற்றுக் கிழமை(11) தேற்றாத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சமூதாயம் கல்வியில் பின்னோக்கி செல்கின்ற நிலை காணப்படுகின்றது கிழக்கு பல்கலைக்கழகத்தினை எடுத்துக் கொண்டால் இங்கு பல பிரச்சினைகள் உள்ளன இதற்கு காரணம் உப வேந்தர்.

இவர் எடுத்த எடுப்பிலே தான்தேன்றித்தனமாக மாணவர்கள் மத்தியில் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருகின்றார் அங்கிருக்கின்ற மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக தற்போது கிழக்கு பல்கலைக்கழகம் சிக்கலான நிலையில் உள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழகம் அண்மையில் திறக்கப்பட்டதுடன் அந்த பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தினையும் பெற்று சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

எமது தமிழ் சமூதாயம் எதை ஒப்பிட்டு பார்த்தாலும் கீழ் நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது.  இன்று எமது கிழக்கு பல்கலைக் கழகம் மாணவருக்கும் உப வேந்தருக்குமான பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

ஒரு உப வேந்தர் சர்வாதிகாரமாக செயற்பட்டு  ஜனநாயகம் பேணப்படாமல் மாணவர்களை வெளியேற்றி இருக்கின்றார். இப்படியிருந்தால் தமிழ் சமூதாயம் எப்படி முன்னே வாய்ப்பு ஏற்படும்?.

மட்டக்களப்பு தமிழ் சமூதாயம் பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, அரசியல் போன்ற துறைகளிலே தற்போது பின்னடைவை எதிர் நோக்கியுள்ளதுடன் ஏனைய சமூகத்துடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது.

இத்தனைக்காலம் கட்டிகாத்து வந்த கல்வி, பொருளாதாரம் அனைத்தும் மெதுமெதுவாக எமது மக்களைவிட்டு நலிவடைந்து செல்லக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எமது தமிழ் சமூகம் இன்று உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0

  • Ganesh Monday, 12 May 2014 12:05 PM

    Why do you allow him to continue in the prestigious chair?? If everyone says he is a culprit, sex pest, useless, uncivilized guy throw him away from Batti. Do it soon otherwise your society would be damaged severely by him and his colleagues.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X