2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெசாக் தினத்திற்காக நிதியுதவி வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மே 13 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,
ஜௌபர்கான்

வெசாக் தினத்திற்காக மட்டக்களப்பு நகர் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பு 50,000 ஆயிரம் நிதியுதவியை  மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோவிடம் திங்கட்கிழமை (12) வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு நகர் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார்  இந்நிதி தொகையை கையளித்தார்.
இன ஐக்கியம் சமூக ஒற்றுமைய கருத்திற் கொண்டு  மட்டக்களப்பு நகர் முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு செயற்பட்டு வருவதாக அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெசாக் நிகழ்வு புதன்கிழமை(14) மாலை மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மங்களராமய விகாரை வளாகத்தில் பிரமாண்டமான வெசாக் தோரணம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X