2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு சிரமதான பணி

Kanagaraj   / 2014 மே 13 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் நேற்று(12)  திங்கட்கிழமை பல்வேறு  நிகழ்வுகள் நடைபெற்றன.
 
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்தின் மீள் குடியேற்றக் கிராமமான இலுப்படிச்சேனை மற்றும் பாலர் சேனை ஆகிய கிராமங்களில் பழுதடைந்த நிலையில் இருந்த 4 குழாய் கிணறுகள் திருத்தப்பட்டு மக்களின் பாவனைக்குகந்த வகையில் மாற்றப்பட்டன.
 
மேலும் மரப்பாலம் கிராமத்தில்; சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன்  தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு அவர்களது கால்நடைகளைக் கட்டி பராமரிக்கக் கூடிய நைலோன் கயிறுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
 
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கதின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொண்டர் கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேகுமார், தொண்டர் இணைப்பாளர் ச.கணேசலிஙகம், முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X