2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தில் சமூக பெண் சாரணியர்கள் உருவாக்கம்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக சமூக பெண் சாரணியர்களை உருவாக்குவதற்கான செயலமர்வும் பயிற்சி நெறிகளும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட விழுது ஆற்றல் மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றன.

இந் நிறுவனத்தின்  செயல் அமர்வானது கடந்த 19.06.2014 தொடக்கம் 21.06.2014 வரையான காலப்பகுதியில் 03 நாள் பயிற்சி அமர்வாக நடைபெற்றது.

இந்நிகழ்வு இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் சமூக பெண்சாரணிய, நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர்   பிரியந்தி ஹேமமாலி ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றன.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண பெண் சாரணியர் சங்;கத்தின் ஆணையாளர், பெண்சாரணிய வழிகாட்டிகள் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கதிரவெளி, பால்சேனை, வம்மிவட்டவான், சூரைநகர், அம்மந்தனாவெளி, கட்டுமுறிவு ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 15  பெண்கள் மற்றும் விழுது உத்தியோகத்தர்கள்; உட்பட  சுமார் 25 பேர் இப் பயிற்சி நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்நிகழ்வானது பெண் சாரணியர்களின் 100ஆவது ஆண்டு நிறைவை  கொண்டாடும் முகமாக, அதன் ஆரம்பகட்ட நிகழ்வாக நடைபெற்றது.
இதன் மூலமாக, எதிர்காலத்தில் சமூகத்தில்; பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகங்கொடுத்து, சிறப்பாக வாழ்வதற்குரிய செயன்முறைகளுடனான  வழிகாட்டல்களும் இடம்பெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .