Suganthini Ratnam / 2015 ஜனவரி 22 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எரிபொருள் விலை குறைப்புக்கமைய 117 ரூபாய்க்கு ஒரு லீற்றர் பெற்றோலை விற்பனை செய்யாமல், பழைய விலையான 150 ரூபாய்க்கு ஒரு லீற்றர் பெற்றோலை இன்று வியாழக்கிழமை காலை விற்பனை செய்ததாகக் கூறப்படும் காத்தான்குடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு சிறிதுநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
நேற்று புதன்கிழமை நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலையை குறைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 150 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிய பலர், மீதி பணத்தை தருமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் கேட்டபோது, மட்டக்களப்பு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திடமிருந்து விலை குறைப்புச் செய்த விலைக்கு விற்பனை செய்யுமாறு எமக்கு அறிவிக்கவில்லை எனவும் இதனாலேயே, பழைய விலைக்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்தார்.
குறித்த எரிபொருள் நிலையத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025