Suganthini Ratnam / 2015 ஜனவரி 22 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியிலுள்ள வீடொன்றினுள் புதன்கிழமை (21) இரவு புகுந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வீடொன்றினுள் புகுந்ததைக் கண்ட பொதுமக்கள், வீட்டைச் சூழ்ந்துகொண்டு சந்தேக நபரை பிடித்ததாகவும் இதன்போது அவர் சிங்களத்தில் பேசியதுடன், தான் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்று கூறியதாகவும் பின்னர் ஊர்மக்கள் அவரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025