2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. வர்த்தக நிலையங்களில் சோதனை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரிலுள்ள  வர்த்தக நிலையங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  இன்று வெள்ளிக்கிழமை  மேற்கொண்ட  திடீர்ச் சோதனையின்போது,  சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் மற்றும் பாவனைக்குதவாத பெருமளவு பொருட்களை கைப்பற்றியதாக வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.அமுதமாலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் சுகாதாரத்துக்கு  கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக  கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மட்டக்களப்பு வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான  பொதுச்சுகாதார பரிசோதகர்களான வா.ரமேஸ்குமார், டி.ராஜாரவிவதர்மா ஆகியோரைக் கொண்ட குழுவினர் சோதனையில்  ஈடுபட்டனர்.

இதன்போது, உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்   எம்.அமுதமாலன் தெரிவித்தார்.

குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X