Suganthini Ratnam / 2015 ஜனவரி 23 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் நிறைவு சம்பந்தமாக ஆராயும் விசேட மீளாய்வுக்கூட்டம் வியாழக்கிழமை (22) மாலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா, மாவட்ட திட்டமிடல் பிரிவு கணக்காளர் ஏ.பசீர் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.
மாவட்ட திட்டமிடல் செயலகம், 14 பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகியவற்றில் பணிபுரியும் பிரதி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் உததியோகஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், இந்திய வீட்டுத்திட்டம், கிராமிய பாடசாலை அபிவிருத்தி, கிழக்கின் உதயம், விசேட அபிவிருத்தித்திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித்திட்டங்கள், தெயட்ட கிருள (தேசத்துக்கு மகுடம்), திவிநெகும, கிராமிய வீதிகள் அபிவிருத்தி பிராந்திய அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், கடந்த வருடத்தில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலக்காகக்கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், தூர்ந்துபோன குளங்களையும் புனரமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட காசுக்கு வேலைத்திட்டம், கடந்த வெள்ள அனர்த்தம் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களின் அனுபவங்கள், அவற்றை எதிர்காலத்திட்டத்துக்கு கற்றுக்கொண்டவைகளாக பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
நடைபெற்ற மீளாய்வின்படி கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற அபிவிருத்தி வேலைகளுக்கான நிதியொதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அரசாங்க அதிபர் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025