Gavitha / 2015 ஜனவரி 24 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஜோ.சேயோன்
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிவிவுக்குட்பட்ட பிரதேசத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரை களுவாஞ்சிக்;குடி பொலிஸார் இன்று (24) அதிகாலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்வர்களிடமிருந்து ஒவ்வொன்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஐ போன்கள், நான்கறை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், காணாமல் போயிருந்த 1 இலட்சம் ரூபாயை அவர்கள் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வீடுகளில், ஒரேயிரவில் வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இச்சம்பவத்தை தொடர்ந்து, களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்ணாயக்கவின் கட்டளையின் பெயரில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, இந்த மூவரும் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தம்பிலுவில், மாமாங்கம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மூவரும் மேலும் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025