Sudharshini / 2015 ஜனவரி 24 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் வாரமளவில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.
பங்குபற்ற விரும்பும் ஊடகவியலாளர்கள், 0652222832 அல்லது 0712164061 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு, தமது பெயர்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், முன்பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே செயலமர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
இச்செயலமர்வு கொழும்பிலிருந்து வருகைதரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களால் நடாத்தப்படவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊடகவியலாளர்களே அனுமதிக்கப்படவிருப்பதால் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்பதாக தமது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025