2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்களை தந்துதவுங்கள்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 25 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல், கே.எல்.ரி.யுதாஜித்  

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளாக இருக்கலாம். அமைச்சர்களாக இருக்கலாம். அரச உயர் அதிகாரிகளாக இருக்கலாம் கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பின் எமக்கு இரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ அவற்றை தந்துவிடுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம், தமிழ் அரசுக் கட்சியின் அரசடித்தீவு கிளையில் சனிக்கிழமை (24) மாலை நடைபெற்றது.  இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

'முன்னாள் ஜனாதிபதியை பற்றியும் அவருடன் சார்ந்தவர்கள் பற்றியும் பல்வேறுபட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தற்போது வெளிவந்தவண்ணமுள்ளன இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக  எம்.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுதுள்ள  பிரச்சினை என்னவென்றால், கடந்த அரசுடன் சேர்ந்து அரசியல்வாதிகளாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம்,  அதிகாரிகளாக இருக்கலாம் நீங்கள் அறிந்த வகையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருந்தால், எங்களிடம் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தந்து உதவுங்கள்.

இதை ஏன் நான் கூறுகின்றேன் என்றால், அந்த விடயங்களை வைத்துக்கொண்டு கடந்தகால ஆட்சி எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவரமுடியும்.  இவர்களை நாங்கள் தண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இவ்வாறனவர்கள் எதிர்காலத்தில் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்கும் நல்ல ஆட்சி நடக்கவேண்டும் என்பதற்கும் இதை மேற்கொள்கின்றோம்.

மேலும், யாராவது காணாமல்போயிருந்தால் அல்லது சிறையில் தடுத்துவைத்து பார்க்கமுடியாமலிருந்தால் அதையும் எமக்கு அறியத்தந்து  உதவுங்கள். சிலவேளைகளில் அதை நாங்கள் கண்டுபிடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கும்.
கூட்டமைப்பை நிட்;சயமாக முழுமையாக ஆதரிக்கவேண்டும். இதனால் மாத்திரமே இந்த மாற்றத்தை  நாங்கள் தொடர்ச்சியாக தக்கவைக்கவேண்டும் என்று  நான் எதிர்பார்க்கின்றேன்.

ஐனாதிபதித் தேர்தலின் பின்னர் மக்களை தெளிவுபடுத்தி நடைபெறும் முதலாவது  கூட்டமாக இதை  நான் பார்க்கின்றேன். உண்மையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X