2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்கும் பயிற்சி

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 27 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கையில் நிலைத்துநிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சிநெறி செவ்வாய்க்;கிழமை (27) மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

ஐரோப்பிய யூனியனின் நிதி அனுசரணையோடு சுவிற்ச் ஏசியா (ளுறவைஉhயளயை) எனும் இந்தத்திட்டம், ஜனதாக்ஸன் மற்றும் பீப்பிள் இன் நீட் (Pநழிடந in நேநன) ஆகிய நிறுவனங்களினால் அமுல்படுத்தப்படுவதாக பயிற்சி வளவாளரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளருமான அனுலா அன்ரன் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சிநெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர உணவு விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 30 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

உயிர்வாயு தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் ஓரங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெற்றது.

உயிர்வாயு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப்பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்பட்டுவருவதாக அனுலா அன்ரன் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் பீபிள் இன் நீட் நிறுவனத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பீற்றர் ட்ரபோலாவ் (Pநவச னுசடிழாடயஎ) பிரதிப் பணிப்பாளர் துவான் ஆரிபீன், அதன் இலங்கைக்கான பணிப்பாளர்  ஸ்டெபனி செமின் (ளுவநிhயnநை ஊhநஅin) மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், ஜனதாக்ஸன் நிறுவனத்தின் விரிவாக்கல் அதிகாரி ஜே.பாஹிமா, தொடர்பு அதிகாரி எஸ்.செனசியா, தொழில்நுட்பவியலாளர் ஆர்.ஆனந்த, திட்ட முகாமையாளர் டி.எல்.சமரகோன் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினரும் இதில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X