2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீடமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 28 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

புதிய  அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள வீடமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (27) ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோதே, வீடமைப்புச் செயற்பாடுகள்தொடர்பில் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட  முகாமையாளர் கே.ஜெகநாதன், பிரதேச செயலாளர்கள்,  வீடமைப்புக்கு பொறுப்பான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 50 ஆயிரம் வீடுகள் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் அமைக்கப்படவுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேர்தல் தொகுதிவாரியாக கல்குடாத்தொகுதியில் 300 வீடுகளும் மட்டக்களப்புத்தொகுதியில் 600 வீடுகளும் பட்டிருப்புத்தொகுதியில் 300 வீடுகளுமாக 1,200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின்படி வீடுகள் தேவையாகவுள்ளவர்களை  தெரிவுசெய்தல், நடைமுறைப்படுத்துதல், வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்  ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X