Gavitha / 2015 ஜனவரி 28 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவு புதன்கிழமை (28) மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் 'கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும் சமகால அரசியல்; கருத்தரங்கும்' என்னும் தலைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
1989ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து இக்கொலை பிரபல்யம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.


8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025