Suganthini Ratnam / 2015 ஜனவரி 29 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழடித்தீவிலுள்ள இறால் பண்ணையில் 20 ஏக்கர் அண்மைய மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீரியல்வள உயிரினவியலாளர் எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.
250 ஏக்கரைக்கொண்ட மகிழடித்தீவு இறால்; பண்ணையில் 150 ஏக்கரில் மட்டுமே இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 7,000 கிலோ இறால்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மேற்படி இறால் பண்ணையாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், பண்ணையில் எஞ்சிய இறால்களை புதன்கிழமை (28) அறுவடை செய்;தபோது, சுமார் 100 கிலோ இறால்கள் பிடிபட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு பிடிக்கப்படும் இறால்களை கொழும்பிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்வதாகவும் சந்தையில் ஒரு கிலோ இறால் 1,000 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025