Suganthini Ratnam / 2015 ஜனவரி 29 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாவற்கொடிச்சேனை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த காந்திநகர் பிரதேசத்தைச் சேர்ந்த நல்லதம்பி சோமசுந்தம் (வயது 54) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
வயல் வேலைக்குச் சென்றபோதே இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த நிலையில், உடனடியாக தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இருந்துவரும் யானைத் தொல்லை காரணமாக இந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவருகின்றனர்.
6 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025