Suganthini Ratnam / 2015 ஜனவரி 30 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகரசபையின் மீது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் என்ற வகையில் தனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்று காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாட் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் காத்தான்குடி நகரசபை கட்டடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதைக் கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, காத்தான்குடியில் சில தினங்களுக்கு முன்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, காத்தான்குடி நகரசபை மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அதனை உள்ளூரில் அமைக்கும் விசாரணை பொறிமுறையின் கீழ் விசாரணை செய்வதற்கு காத்தான்குடி நகரசபை தலைவர் ஒத்துழைப்பு வழங்கினால் அந்த ஊழல்களை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உள்ளூரில் விசாரணை பொறிமுறையின் கீழ் விசாரணை செய்வதற்கு காத்தான்குடி நகரசபை தலைவர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும். காத்தான்குடி நகரசபையின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படல்வேண்டும். அவ்வாறு உண்மையிருந்தால் அதை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது அவசியமாகும்.
இவர்கள் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கமுடிhயது. அவ்வாறு நான் ஊழல் செய்திருந்தால், அதை நிரூபிக்கவேண்டும்.
நான் காத்தான்குடி நகரசபைக்கு மக்கள் பிரதிநிதியாக வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்கே. இதுவரைக்கும் நான் எந்த சலுகைகளையும் இதன் மூலம் பெற்றதில்லை.
நான் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தபோதிலும், தவிசாளர் எனக்கு சில விடயங்களை சொல்லுவதில்லை. என்னுடைய தனிப்பட்ட பணத்தில் எனது பொருளாதார கஸ்ட நிலைக்கு மத்தியிலும் நான் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக உதவிவருவதுடன், எந்தவொரு நலனையும் எதிர்ப்பார்த்து அரசியலில் ஈடுபடவில்லை.
ஊழல் யார் செய்திருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நிரூபிக்கவேண்டும்' என்றார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago