2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய தந்தை கைது

Princiya Dixci   / 2015 ஜனவரி 30 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தனது 14 வயது மகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 47 வயதான  தந்தையை மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸார், வெள்ளிக்கிழமை (30) கைது செய்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை (28) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சம்பவங்களை பரிசீலனை செய்யும் பொலிஸ் பிரிவின் (சொகோ) மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X