2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சமூக விழிப்புணர்வு செயலமர்வு

Sudharshini   / 2015 ஜனவரி 31 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்குடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கான இரண்டுநாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்றது.


மட்டக்களப்பு, உதவிப்பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் தேவை நாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இன்று சனிக்கிழமை(31) காலை ஆரம்பமானது.


இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமையும் (01) இந்த செயலமர்வில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேவைநாடும் மகளிர் அமைப்பின் கொழும்பு காரியாலய அதிகாரி திருமதி சந்திரா தியாகராஜா, அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன், இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன், அமைப்பின் உளவள துணையாளர் ஜெயதீபா பத்மஸ்ரீ, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ்,மேரி மெக்டாலின் சுரேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


இந்த செயலமர்வின்போது பால்நிலை வன்முறைகள் தொடர்பான சம்பவங்களை கையாளவும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த பயிற்சிநெறியின்போது தேவை நாடும் மகளிர் அமைப்பினால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கையேடும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X