2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காத்தான்குடியில் வரி அதிகரிப்புக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் வரி அதிகரிக்கப்பட்டமையை காத்தான்குடி வரியிறுப்பாளர் சங்கம் கண்டித்துள்ளது. காத்தான்குடி வரியிறுப்பாளர் சங்கம் நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடத்திய அதன் பொதுச்சபை கூட்டத்தில் ஏகமனதாக இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி வரியிறுப்பாளர் சங்கத்தின் ஆலோசகர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.எம்.மஹ்றூப் கரீம் தலைமையில் காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போது,  காத்தான்குடி நகரசபைப் பிரிவில் அந்நகரசபையினால் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதிகரித்த வரியையும் எதிர்ப்பதாக இங்கு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, காத்தான்குடி வரியிறுப்பாளர் சங்கத்துக்கு நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.
சங்கத்தின் தலைவராக  சி.எம்.கலீல், செயலாளராக  எம்.எம்.புகாரி, பொருளாளராக எம்.செய்யது அகமது, உப தலைவராக எம்.எல்.அகமட் லெவ்வை, உப செயலாளராக எம்.ஏ.எம்.றாசிதீன் ஆகியோரும் ஏழு பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இந்தச் சங்கத்தின் ஆலோசகராக ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.எம்.மஹ்றூப் கரீம் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் அதிகரிக்கப்பட்ட வரி தொடர்பாக காத்தான்குடி நகரசபைத் தலைவருடன் கலந்துரையாடிய பின்னர் ஏனைய நடவடிக்கைக்கு செல்வதென இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எம்.எம்.புகாரி தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த காத்தான்குடி வரியிறுப்பாளர் சங்கத்தின் ஆலோசகர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.எம்.மஹ்றூப் கரீம்,  'நாட்டில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு இருந்த வரிச்சுமை நீக்கப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில், காத்தான்குடி நகரசபை காத்தான்குடி மக்களின் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளது.

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் நகரசபையினால் கடந்த வருடங்களை விட இவ்வருடம் இரண்டு மடங்கு வரி அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் காணப்படாத வரி, காத்தான்குடியில் அதிகரிக்கப்பட்டதே  இங்குள்ள முக்கிய விடயமாகும்.

காத்தான்குடி மக்களுக்கு சுமத்தப்பட்ட மிகப்பெரிய வரிச்சுமையாகும். எனவே, இதை எமது சங்கம் கண்டிப்பதுடன், இந்த அதிகரிக்கப்பட்ட வரி நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X