2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் 10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை, வெள்ளிக்கிழமை (06) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்று இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவன் தனது தாயிடம் கூறியதையடுத்து தாய், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 67 வயதாக சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், காத்தான்குடி பொலிஸார் இன்று இவரைக் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுவன் அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 4இல்  கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X