Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மத்தியஸ்தசபைகள் சட்டத்தை பிரயோகிக்கும் இடமல்ல, பிணக்குகளை சமரசப்படுத்தி வைக்கும் இடமே மத்தியஸ்தசபைகளாகும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.
மண்முனைப்பற்று மத்தியஸ்தசபையின் வருடாந்த ஒன்றுகூடல் சனிக்கிழமை (7) அப்பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'மத்தியஸ்தம் என்பது இன்று, நேற்று உருவானதல்ல. மனிதன் படைக்கப்பட்டது முதல் மத்தியஸ்தம் உருவாகிவிட்டது. ஆனால், சட்டம், நீதிமன்றங்கள் என்பன பின்னர்; உருவானது.
மத்தியஸ்தசபைகளிலுள்ள உறுப்பினர்கள் பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும். இறைவனுடைய திருப்தியை மாத்திரம் எதிபார்த்தவர்களாக மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் செயற்படவேண்டும். மத்தியஸ்தசபைகள் சட்டத்தை பிரயோகிக்கும் இடமல்ல. நீதிமன்றத்தில் சட்டம் முன்னிலைப்படுத்தப்படும். மத்தியஸ்தசபைகளில் சமரசமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
மத்தியஸ்தசபைகளை நாடி வருகின்ற பிணக்குகளை உடையவர்களை சமரசப்படுத்தி அவர்களை திருப்தியுடன் அனுப்பும் இடமாக மத்தியஸ்தசபைகள் திகழ்கின்றன. அவசரப்பட்டு எந்த முடிவுவையும் எடுக்காமல், ஆறுதலாக அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து முடிவுகளை எடுக்கவேண்டும்' எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று மத்தியஸ்தசபையின் பிரதி தலைவர் வி.கந்தசாமி, ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரி டாக்டர் மோகனாவதி சுரேந்திரன், காத்தான்குடி மத்தியஸ்;தசபையின் தலைவர் எம்.ஐ.உசனார், மண்முனைப்பற்று மத்தியஸ்தசபையின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago