2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பால்நிலை சமத்துவம் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வு

Sudharshini   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை (12) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையுடன் தேவைநாடும் மகளிர் அமைப்பு இச்செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.


தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகளுக்கான நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் வி.சபரிநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


இந்நிகழ்வில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன், உளவள துணையாளர் ஜெயதீபா பத்மஸ்ரீ ஆகியோர் இதன்போது கருத்துரைகளை வழங்கினர்.


சமூகத்தில் ஏற்படும் பால் நிலை தொடர்பான வன்முறைகளை தடுத்தல், அது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தல், மத்தியஸ்த சபைக்கு வரும் பால்நிலை தொடர்பான பிரச்சினைகளை கையாளும் போது ஏற்படும் சிக்கல் நிலைகளை தீர்த்துக்கொள்ளுதல் தொடர்பிலான பயிற்சிகளும் இதன்போது வழங்கப்பட்டன.


இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X