Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியையும் பாலமுனையையும் இணைக்கும் கர்பலா வீதியை சீரமைத்து தருமாறு கோரி பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
ஜும்மா தொழுகையின் பின்னர் பாலமுனை ஜாமியுல் ஹசனாத் பள்ளிவாசல் சந்தியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், பேரணியாக கர்பலா சந்திவரை சென்றனர்.
இதன்போது, ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தோர் 'பொய்யான வாக்குறுதி வேண்டாம்', 'எமது வீதி சீரமைக்கப்படுமா?', 'நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களே பதில் கூறுங்கள்', 'வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே' போன்றவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
இந்த கர்பலா வீதி பல ஆண்டுகளாக குன்றும்குழியுமாக காணப்படுகின்றது. 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு புனரமைப்புமின்றி சீரற்ற நிலையில் காணப்படும் இவ்வீதியை சீரமைத்து தருமாறு இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்போது வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீனிடத்தில் மகஜரையும் ஆர்;ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
இந்த வீதி தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசீமுடன் பேசி இந்த வீதியை செப்பனிட நடவடிக்கை எடுப்பேன் எனவும் இந்த வீதி அபிவிருத்தி தொடர்பில் ஏனைய அரசியல்வாதிகளுடனும் தொடர்புகொண்டு கோரிக்கைகளை விடுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago