Gavitha / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) முதல் பகல் வேiளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களுக்கு காலை முதல் மாலை வரை அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான மேலதிக தகவல்களை அலுவலக அலைபேசி இலக்கமாக 065-2224439 மற்றும் 065-2222639 பெறலாம் என அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (16), வியாழக்கிழமை (19) இரு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சேத்துக்குடா, வீச்சுக்கல்முனை, திமிலைதீவு மற்றும் புதூரில் வெள்ளிக்கிழமை (20) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை கல்லடி, நாவற்குடா, நொச்சிமுனை மற்றும் மஞ்சந்தொடுவாய் ஆகிய இடங்களிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
மேலும் சனிக்கிழமை (21) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை களுவாஞ்சிக்குடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு மற்றும் பெரியநீலாவணை போன்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago